Pages

31 டிச., 2021

RIKAS BLOG

It’s good to down load torrent files and view and also it’s very fast to downloading 
For best option for iPad user https://www.seedr.cc/


Watch, Listen, Read. Anything is accessible! Whenever you get stuff with Seedr you can open and play it online on your personal Desktop, Mobile Device and even on your TV!


10 அக்., 2013

கோபப்பட வேண்டாம் இதுவும் கவிதை ..

பறவைகளில் அவள் அண்டங்காக்கா
பாடல்களில் அவள் ஒப்பாரி
கனிகளிலே அவள் வேப்பங்க்கனி
காற்றினிலே அவள் சூறாவளி

நான் உன்னை கண்ட பொழுது என்னை மறந்தேன் 
உன் தங்கையை கண்டதும் உன்னையே மறந்தேன்...


யாரோ எழுதுனது... 

கவிதை..

நீ என்னையே உற்றுப்பார்த்தாய்
வெட்கமாய் இருந்தது
அப்புறம்தான் தெரிந்தது
நீ பார்த்தது
என் சம்பள கவரை என்று


நீ மட்டும்தான்
அழகென்று சொன்னதும்
சிரித்தாள்;
நானும் பதிலாய் சிரித்தேன்
சொன்னது பொய் என்பதால்..


நம் முதல் சந்திப்பு
நினைவிருக்கிறதா என்றாள்;
உன் தோழியோடு
உன்னை சந்தித்ததாய் சொன்னேன்..
ஆச்சரியத்தோடு
அந்த அளவுக்கு பிடிக்குமா என்றாள்;
தோழியை பிடிக்குமென்றேன்...! 

கவிதை கவிதை ..

பாவம் பெண்கள் கவிதை கவிதை 

வியாபாரத்தில் தவிர்க்க வேண்டியவை ( அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் (நழீமி)

அனுமதிக்கப்பட்ட எந்த வியாபாரத்தில் ஈடுபடும்போதும் கவனத்தில்கொள்ளவேண்டிய சில அம்சங்களை இஸ்லாம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அவற்றைப் புறக்கணித்து நடக்கும் வியாபாரிகள் மறுமையில் பாவிகள் கூட்டத்தில் எழுப்பப்படுவர் என ஹதீஸ்கள் எச்சரிக்ன்றன. 


ஒருமுறை நபியவர்கள் தொழுகைக்காகச் செல்லும்போது மக்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைக் கண்டு, "வியாபாரிகளே" என அழைத்தார்கள்.அங்கிருந்த வியாபாரிகள் நபியவர்களின் அழைப்பை ஏற்று தமது தலைகளை உயர்த்திபார்வைகளை அன்னார்பக்கம் செலுத்தினர். அப்போது நபியவர்கள் அவர்களைப் பார்த்து  "வியாபாரிகளில் அல்லாஹ்வைப் பயந்து உண்மை பேசி நன்மை செய்தவரைத் தவிர ஏனையோர் பாவிகளாகவே மறுமையில் எழுப்பப்படுவர்" என்றார்கள். (திர்மிதீ, இப்னு ஹிப்பான்)

நபியவர்கள் வியாபாரிகளாக இருந்த எம்மிடம் வந்து "வியாபாரிகளே! பொய்யையிட்டு உங்களை நான் எச்சரிக்கிறேன்" என்று கூறுபவர்களாக இருந்தார்கள் என "தபரானி"யில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது.


வியாபாரத்தின்போது தவிர்க்கவேண்டிய முக்கிய அம்சங்கள்

1. அளவை நிறுவையில் மோசடி செய்தல்

அளவை நிறுவையில் முறையாக நடந்து கொள்ளவேண்டுமென அல்லாஹ் கீழ் வரும் அல்குர் ஆன் வசனத்தின் மூலம் பணிப்புரை விடுக்கிறான்.  

"நீங்கள் அளந்தால் பூரணமாக அளவுங்கள்; நிறுத்தால் சரியான எடையைக் கொண்டு நிறுங்கள்......."

அளவை நிறுவையில் மோசடி செய்வதை அல்லாஹ் விலக்கியுள்ளமையைக் கீழ்வரும் அல்குர் ஆன் வசனத்திலிருந்து தெளிவாக விளங்க முடியும். 

அளவை நிறுவையில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால் நிறைய அளந்துகொள்கின்றனர். மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுக்கும்போதும்; நிறுத்துக் கொடுக்கும்போதும் குறைத்துவிடுகின்றனர். மகத்தான ஒரு நாளில் நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா? அந்த நாளில் மனிதர்கள் அகிலத்தின் இறைவன் முன்  (விசாரணைக்காக) நிற்பர். (83: 1 - 6)

விற்றல், வாங்கல் நடவடிக்கைகளில் விட்டுக்கொடுத்து நிதானமாக நடந்து கொள்ளவேண்டும்.

"விற்கும்போதும் வாங்கும்போதும் தன் உரிமையைக் கோரும்போதும் தாராளத் தன்மையுடன் நடந்து கொள்ளும் மனிதனுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக"  என்று நபியவர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள். (புஹாரி, திர்மிதீ)


2. அபகரிக்கப்பட்ட, திருடப்பட்ட பொருட்களை வாங்குதல்

ஒருவர் மர்ரொருவரிடம் இருந்து நியாயமற்ற முறையில் பெற்ற ஒரு பொருளை விற்பாராயின் அதனை வாங்குவது ஹராமானதாகும்.

"எவர் திருடப்பட்ட ஒரு பொருளை அது திருடப்பட்ட பொருள்தான் என அறிந்திருதும் வாங்குவாராயின் அவரும் அதன் பாவத்திலும் குற்றத்திலும்  பங்கேற்றவராவார்". (அல் பைஹகீ)

அவ்வாறே மதுபானம் தயாரிப்பதற்காகத் திராட்சையை வாங்குபவருக்கு அதனை விற்பது ஹராமானதாகும். மேலும் குழப்பவதிகளுக்கும் விஷமிகளுக்கும் ஆயுதங்களை விற்பனை செய்வதும் கூடாது. இவ்வாறு ஒரு ஹலாலான பொருளாயினும் அதனை ஒரு ஹராத்தைச் செய்வதற்குப் பயன்படுத்துவோருக்கு விற்பது விலக்கப்பட்டதாகும்.


3. வியாபாரத்தில் அதிகம் சத்தியம் செய்தல்

அதிகமாக சத்தியம் செய்வது அல்லாஹ்வின் மகத்துவத்தைக் குறைப்பதாக அமைவதுடன் நுகர்வோரை ஏமாற்றுவதற்கான வழியாகவும் அமைய முடியும். இதனாலேயே நபியவர்கள் இதைப் பின்வரும் ஹதீஸ்கள் மூலம் தடுத்தார்கள்.

"சத்தியம் செய்வது பண்டத்திற்கு கிராக்கியை ஏற்படுத்தினாலும் 'பரக்கத்'தை அழித்துவிடும்" (புஹாரி) 
"நிச்சயமாக வியாபாரிகளே பாவிகள்" என நபியவர்கள் குறிப்பிட்ட போது "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி இருக்கிறான் அல்லவா" என்று ஸஹாபாக்கள் வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம். எனினும், அவர்கள் சத்தியம் செய்து பாவம் செய்கின்றார்கள். பேச்சில் பொய் சொல்கிறார்கள்" என்று கூறினார்கள். (அஹ்மத்)


4. பள்ளிவாசலில் வியாபாரத்தில் ஈடுபடல்

பள்ளிவாசலில் வியாபாரத்தில் ஈடுபடுவதைச் சில அறிஞர்கள் அனுமதித்தாலும் அது விரும்பத்தக்கதல்ல என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.

"நீங்கள் பள்ளிவாசலில் விற்பவரையோ வாங்குபவரையோ கண்டால், 'அல்லாஹ் உனது வியாபாரத்தை இலாபகரமானதாக் அமைக்காதிருக்கட்டும்' என அவனுக்குக் கூறுங்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

ஜும்மாவுக்காக அதான் சொல்லப்பட்டதன் பின் வியாபாரம் செய்வது ஹராமாகும். இமாம் அஹ்மத் போன்ற சில அறிஞர்கள், 'அவ்வேளையில் நடைபெற்ற வியாபாரம் செல்லுபடியாகாது' என்று கூறுகின்றனர்.


5. விலைக்கட்டுப்பாடு - அத்தஸ்ஈர்

வாங்குவோர், விற்போர் ஆகிய இரு தரப்பினதும் நலனைக் கருத்திற்கொண்டு பொருட்களுக்கு ஒரு குறித்த விலையை நிரணயிப்பதே நடைமுறையில் விலைக்கட்டுப்பாடு என வழங்கப்படுகிறது. சில நபிமொழிகளில் இச்செயற்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாள் சில மனிதர்கள் நபியவர்களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரே! பண்டங்களின் விலை அதிகரித்து விட்டது. எனவே, விலையைக் கட்டுப்படுத்துங்கள்" என்று கேட்டனர். அதற்கு நபியவர்கள் "விலையை நிர்ணயிப்பவனும் ரிஸ்க்கை சுருக்குபவனும்  விரித்துக் கொடுப்பவனும் வாழ்க்கை வசதிகளை அளிப்பதும் அல்லாஹ்வே. உண்மையாக, உங்களில் எவரும் உயிரிலோ பொர்ருளிலோ இழைக்கப்பட்ட ஓர் அநீதிக்காக என்னிடம் கோராத நிலையில் நான் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறேன்" என்று கூறினார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)

இந்நபிமொழியை ஆதாரமாக வைத்து அரசு விலைக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துவது கூடாது என்ற கருத்தை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில், அது அநீதியாக அமைவதோடு பொருளாதார நடவடிக்கைகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் அமையும். நுகர்வோர் நலன் பேணப்பட வேண்டியது போலவே வியாபாரிகள் நலனும் பேணப்பட வேண்டும். விலைக்கட்டுப்பாட்டின் காரணமாக பொருட்கள் சந்தையிலிருந்து மறைய இடமுண்டு. இதனால் விலேய்யேற்றம் ஏற்படலாம். இது ஏழைகளைப் பாதிக்கும். ஆனால், செல்வந்தர்களோ கூடிய விலையில் கறுப்புச் சந்தையில் பொருட்களைப் பெற்றுக் கொள்வர்.

பொதுவாக விலைக்கட்டுப்பாடுக்கு இஸ்லாத்தில் அனுமதி ஈல்லாவ்விடினும், முழுச் சந்தையும் பாதிப்படையும் வியாபாரிகள் கூடிய அளவில் நியாயமற்ற முறையில் நடக்க முற்பட்டால் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் பதுக்கலைத் தடுக்கவும் அநீதியை நிறுத்தவும் அரசு தலையிடும்; விலைக்கட்டுப்பாடும் அனுமதிக்கப்படும். இச்சந்தர்ப்பங்களில் விலைக்கட்டுப்பாட்டை அனுமதிக்கலாம் எனது இமாம் மாலிக் மற்றும் சில ஷாஃபிஈ அறிஞர்களின் கர்ருத்தாகும்.


6. பதுக்கல் - அல் இஹ்திகார்

விலையேற்றம் கருதிப் பண்டங்களைப் பதுக்குவது ஹராமாகும். பேராசையும் பிறர் நலன் பேணாத்தன்மையுமே ஒருவனை இத்தீய செயலைச் செய்யத் தூண்டுகின்றன. பதுக்கலால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களையும் நாம் அறிந்துள்ளோம். இவற்றைக் கருத்திற்கொண்டே இஸ்லாம் பதுக்கலைத் தடை செய்துள்ளது. பின்வரும் நபிமொழிகள் இதற்கு சான்று பகர்கின்றன.

1. "பதுக்கியவன் பாவி" (முஸ்லிம், அபூதாவூத்)
2. "உணவுப் பொருட்களை 40 நாட்களுக்குப் பதுக்கியவன் அல்லாஹ்வை விட்டும் நீங்கிக் கொள்கிறான். அல்லாஹ்வும்   
     அவானை விட்டும் நீங்கிக் கொள்கிறான்." (அஹ்மத், அல்ஹாகிம்)
3. "பதுக்கல் செய்பவ்வனே மிகக் கெட்ட அடியானாவான். வ்விலை இறக்கத்தைக் கேட்டால் அவன் கவலைப்படுகிறான். 
     வில்யேற்றத்தைக் கேள்வியுற்றால் மகிழ்ச்சியடைகிறான்." (றஸீன்)

அனைத்து வகையான பதுக்கல்களும் ஹராமானவை. பதுக்கல் ஹராமானதாகக் கொள்ளப்படுவதற்கு அறிஞர்கள் மூன்று நிபந்தனைகளைக் குறிப்பிடுகின்றனர்.

அவையாவன: 

1. பதுக்கிய பொருள் பதுக்கியவனினதும்  அவனது பராமரிப்பிலிருப்போரினதும் ஒரு வருடத்தேவையின் அளவை விடவும் அதிகமாக இருத்தல் வேண்டும். ஏனெனில், ஒருவருக்கு ஒரு வருடத்துக்குத் தனக்கும் தனது குடும்பத்துக்கும் தேவையான பொருளைச் சேமித்து வைக்க அனுமதியுண்டு.

2. குறித்த பொருளின் மீது மக்களுக்குள்ள அத்தியாவசியத் தேவையைக் கருத்திற் கொண்டு, கூடிய விலையில் விற்க வேண்டுமென்ற நோக்கில் பொருளின் விலையேற்றத்தை எதிர்பார்த்துப் பதுக்கி இருத்தல் வேண்டும்.

3. பதுக்கப்பட்ட பொருளின் மீது மக்களுக்குத் தேவையான வேளையில் பதுக்கி இருத்தல் வேண்டும். மாறாக, பல வியாபாரிகளிடம் குறித்த பொருள் இருந்து மக்களுக்கு அதன் மீது தேவையில்லாத போது அதனைத் தேக்கி வைப்பதும் சேமித்து வைப்பதும் தடை செய்யப்பட்டதல்ல. ஏனெனில், இதனால் மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

எத்தகைய பொருளைப் பதுக்குவது கூடாது என்பதில் இமாம்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. சில அறிஞர்களின் கருத்துப்படி ஒருவர் தனது சொந்தத் தானியங்களையோ, உற்பத்திகளைய்யோ தேக்கி வைப்பது பிழையானதல்ல. இமாம்களான் ஷாபிஈ, அஹ்மத் ஆகிய இருவரதும் அபிப்பிராயப்படி அடிப்படையான அத்தியாவசிய உணவுப்பொருட்களில் மாத்திரமே பதுக்கள் ஹராமானதாகக் கொள்ளப்படும். மற்றும் பல அறிஞர்கள் (மேலே கண்ட நிபந்தனைகள் காணப்படுமிடத்து) அனைத்துப் பண்டங்களிலும் பதுக்கள் ஹராமானதாகும் எனக் கூறுகின்றனர்.

7. வட்டி - (அர் ரிBபா)

வட்டி சிறிய அளவில் இருந்தாலும், பெரிய அளவில் இருந்தாலும் அது ஹராமானதாகும். அல்குர் ஆன் வட்டி பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

"விசுவாசிகளே! நீங்கள் (உண்மை) விசுவாசிகளாக இருந்தால் அல்லாஹ்வுக்குப் பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியதுபோக) மீதமிருப்பதை (வாங்காது) விட்டுவிடுங்கள்"

"இவ்வாறு நீங்கள் நடந்துகொள்ளாவிட்டால் அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும்யுத்தம் செய்யச் சித்தமாகிவிடுங்கள். ஆயினும், நீங்கள் (வட்டி வாங்கியமைக்காக மனம் வருந்தி ) மீண்டிவிட்டால் உங்கள் செல்வத்தின் அடிப்படைத் தொகை உங்களுக்குரியது.  நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள். (அவ்வாறே) நீங்கள் அநியாயம் இழைக்கப்படவும் கூடாது. (2: 278, 279)

"ஓர் ஊரில் வட்டியும் விபச்சாரமும் பரவிவிட்டால் அவ்வ்வூரார் அல்லாஹ்வின் தண்டனையை தாமே தங்கள் மீது இறக்கிக் கொண்டோராவர்"  என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல் ஹாகிம்)
"அல்லாஹ் வட்டி உண்பவனையும், அதனை உண்ணக் கொடுப்பவனையும், அதற்கு சாட்சியாக இருப்போரையும், அதனை எழுதுபவனையும் சபித்துள்ளான்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ தாவூத், திர்மிதி)

இஸ்லாத்தில் மட்டுமன்றி முன்னைய வேதங்களான யூத, கிறிஸ்தவ வேதங்களிலும் தடை செய்யப்பட்டே இருந்தது.

அதேவேளை, வட்டியின் வகைகளை நோக்கும்போது அதனை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன:
1. ரிbபா - அந் நஸீஆ
2. ரிbபா - அல் பழ்ல்

   ரிbபா - அந்நஸீஆ 
ரிbபா - அந்நஸீஆ என்பது கடன் கொடுத்தவர் கடன் பெற்றவ்ரிடமிருந்து கால தாமதத்திற்கான பிரதியீடாக பெறக்கூடிய தீர்மானிக்கப்பட்ட மேலதிகத் தொகையைக் குறிக்கும்.

   ரிbபா - அல் பழ்ல்
ரிbபா - அல் பழ்ல் என்பது குறைந்த பணத்தைக் கூடிய பணத்திற்கும் குறைந்த உணவைக் கூடிய உணவிற்கும் கைமாற்றிக் கொள்வதைக் குறிக்கும்.

முதலாவது வகையைப் போன்றே இரண்டாவது வகை வட்டியும் ஹராமாகும். இதுவும் உண்மையான வட்டிக்கு இட்டுச் செல்லும் என்பதனால் விலக்கப்பட்டுள்ளது.

இது பற்றி நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள். "ஒரு தங்க நாணயத்தை இரண்டு தங்க நாணயத்திற்கும், ஒரு வெள்ளி நாணயத்தை இரண்டு வெள்ளி நாணயத்திற்கும் விற்காதீர்கள். ஏனெனில், நான் வட்டியையிட்டும் அஞ்சுகிறேன்." (முவத்தா மலிக்)

ஆறு பொருட்களிலிருந்து இவ்வகை வட்டியைப் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளதை ஹதீஸ்களிலிருந்து அறிய முடிகின்றது. தங்கம், வெள்ளி, கோதுமை, வாற்கோதுமை, ஈத்தப்பழம், உப்பு என்பனவே அந்த ஆறு பொருட்களுமாகும்.

"தங்கத்திற்குத் தங்கமும், வெள்ளிக்கு வெள்ளியும், உப்புக்கு உப்புமாக சம அளவில் உடனுக்குடன் கைமாறிக் கொள்ள வேண்டும். மாறாக அளவைக் கூட்டினால் அல்லது அளவைக் கூட்டுமாறு கூறினால் பெற்றவர், கொடுத்தவர் ஆகிய இருவரும் வட்டியில் ஈடுபட்டோராவர்." (புஹாரி)

ஹதீஸ்களில் குறிப்பாக இந்த ஆறு பொருட்கள் மாத்திரம் கூறப்பட்டுள்ளமைக்குக் காரணம் யாதெனில், இவை மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளாக அமைந்துள்ளமையே ஆகும். தங்கமும் வெள்ளியும் கொடுக்கல் வாங்கல் ஊடகமாகவும் விலைகளுக்கான அளவுகோல்களாகவும் காணப்படுகின்றன. ஏனைய நான்கும் பிரதான உணவுப் பொருட்களாகக் காணப்படுகின்றன. இவற்றில் வட்டி இடம்பெறுவதானது மக்களைப் பெரிதும் பாதிக்கக் கூடியதாக அமையும். எனவே, மக்களின் நலனைக் கருத்திற் கொண்டே குறிப்பாக இவற்றை மேலதிகமாகப் பெறுவது விலக்கப்பட்டுள்ளது.

தங்கம், வெள்ளி அடங்காத விலையைத் தீர்மானிக்கக் கூடியவையும் இதில் அடங்கும். (Eg:- பணம்)

எனவே தங்கம், வெள்ளி போன்றவற்றையோ அல்லது கோதுமை போன்றவற்றையோ அவற்றின் இனத்தைச் சேர்ந்தவற்றுடன் மாற்றும் போது 2 நிபந்தனைகள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.

1. இரண்டும் சம அளவாக இருத்தல்: 
இங்கு ரகத்தையோ தரத்தையோ கவனத்திற் கொள்ளக் கூடாது. 1Kg சம்பா அரிசியை 1 1/2Kg நாட்டு அரிசிக்கு மாற்றிக் கொள்வது கூடாது. அது வட்டியாக அமையும். இதே நடவடிக்கையை ஹலாலாக அமைத்துக் கொள்ள வேண்டுமாயின் முதலில் நாட்டரிசியின் சொந்தக்காரர் அதனை சம்பா அரிசியின் சொந்தக்காரரிடம் பணத்திற்கு விற்க வேண்டும். பின்னர், அப்பணத்தைக் கொடுத்து சம்பா அரிசியை வாங்க வேண்டும். இங்கு விலை வித்தியாசமாக அமைவது பாதிப்பை ஏற்படுத்தாது.

2. பண்டமாற்றத்தின் போது ஒன்றைக் கொடுத்து மற்றையதை தாமதப்படுத்திக் கொடுக்கக் கூடாது. மாறாக உடனுக்குடன் கைமாற்றிக் கொள்ள வேண்டும்.

இரு பண்டங்களும் இனத்தில் வேறுபட்டு நோக்கத்தில் ஒத்திருந்தால், அளவு வித்தியாசம் ஹராமாகாது. ஆனால், இங்கும் கால தாமதம் கூடாது. தங்கத்திற்கு வெள்ளியை மாற்றும் போது தவணையிடாது உடனுக்குடன் கைமாற்றிக் கொள்வது நிபந்தனையாகும்.  ஆனால், அளவில் வித்தியாசம் இருப்பது தவறல்ல. இங்கு குறைந்த தங்கத்துக்குக் கூடிய வெள்ளியைப் பெறலாம். இவ்வாறே கோதுமையையும் மாற்றிக் கொள்ளலாம்.

கைமாறும் இரு பண்டங்களும் இனம், நோக்கம் இரண்டிலும் வேறுபட்டால் குறித்த இரு நிபந்தனைகளும் அவசியமற்றதாகும் 

மேலும், தங்கம், வெள்ளி, பிரதான உணவுப் பொருட்கள் போன்றவை தவிர்ந்தவற்றில், அளவு வித்தியாசமோ கால தாமதமோ பிழையானதல்ல. Eg:- ஓர் ஆட்டை 2 ஆடுகளுக்கு மாற்றிக் கொள்ளலாம்.

8. அல் ஈனா

இது ஒரு ஹராமான வியாபார அமைப்பைக் குறிக்கும். இது வியாபாரமாகத் தோன்றினாலும் அடிப்படையில் வட்டியாகவே காணப்படுகிறது. பணம் தேவைப்படும் ஒருவர் ஒரு பண்டத்தைத் தவணையிட்டு குறிப்பிட்ட விலையில் வாங்குவார். பின்னர் அப்பண்டத்தை எவரிடம் இருந்து வாங்கினாரோ அவருக்கே குறைந்த விலையில் கைக்காசுக்கு விற்றுப் பணத்தை பெற்றுக் கொள்வார். பின் குறித்த தவணையில் குறித்த விலையைச் செலுத்துவார். இவ்வியாபார அமைப்பை இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களும் வேறு சில அறிஞர்களும் அனுமதித்துள்ளனர். ஆனால், ஏனைய மத்ஹப்கள் இதை ஹராமானதாகக் கொள்கின்றன

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை


SATURDAY, JANUARY 5, 2013

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை


அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை

அன்பானவர்களே,சமீபத்தில் ஒரு ஈமெயில் வழியாக வந்த எச்சரிக்கை செய்தியை இங்கு                                       உங்களிடம் பகிர்ந்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன்.                               

அமீரகத்தில் இருக்கும் ஒரு இந்திய சகோதரரின் நண்பர் லண்டன் செல்வதற்காக துபாய் வழியாக வந்துள்ளார். அவர் தான் கொண்டுவந்த லக்கேஜில் நம்ம ஊர்களில் விருந்து சமையளுக்காக பயன்படுத்தப்படும் கஸகஸா இருந்துள்ளது. கஸகஸா (paapy seeds) போதைப் பொருட்கள் தயாரிக்க உதவும் கொடுமையான பொருள் என்று கண்டுபிடிக்கப்பட்டு, பல அரபு நாடுகளில் சமீப காலமாக தடைசெய்து, இதை கொண்டு
 வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை நிர்ணயித்துள்ளார்கள். அந்த அப்பாவி மனுசனுக்கு தெரியாது போல இங்கு அனேக அரபு நாடுகளில் கஸகஸா தடை செய்யப்பட்ட பொருள் என்று.

துபாய் போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக சிறையில் உள்ளார். அவரை வெளியில் கொண்டுவர அவரின் நண்பர்கள் எவ்வளவோ முயற்சி செய்து வருகிறார்கள். கைதானவர் மிக கடினமான பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார், அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க இங்குள்ள வக்கீல்களுக்கு ஆகும் செலவு  இந்திய ரூபாய் 12 லட்சம் மேல் செலவு
 ஆகுமாம்.

என்னா கொடுமை பார்த்தீங்களா சிறிய கவனகுறைவால் வந்த வினை.

இந்த செய்தியை வெளிநாடுகளில் இருக்கும் சகோதரர்களுக்கும், இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு பயனம் செய்பவர்களுக்கும், டிரான்சிடாக வருபவர்களுக்கும் தெரிவிப்பது நம் அனைவரின் கடமை.

தடை செய்யப்பட்ட சில பொருள்கள்:

1. கஸகஸா

2. பான்

3. சுபாரி (beetal nuts), பான் பராக்

அமீரகத்தில் தடை செய்யப்பட்ட பொருள்கள் மட்டும் இது தொடர்பான சட்டங்களை தெரிந்துக்கொள்ள இந்த சுட்டிக்கு சென்று பாருங்கள்.
http://www.dubai.ae/en.portal?topic,Article_000827,1,&_nfpb=true&_pageLabel=home 

இது போன்று ஏற்கனவே இணையத்தளங்களில் படித்ததாக இருந்தாலும், மேலே உள்ள செய்தி எப்போது நடந்தது என்ற தகவல் தெரியவில்லை, இச்செய்தி நமக்கு ஒரு நல்ல எச்சரிக்கை என்பது மட்டும் உண்மை.

உண்மையில் அந்த சகோதரர் அப்பாவியாக இருந்தால் அவரின் விடுதலைக்காக நாம் துஆ செய்வோமாக. இன்ஷா அல்லாஹ்.

தடை செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான மேலும் தகவல்கள் தெரிந்தவர்கள், நம் மக்களுக்கு புரியும்படி இங்கு பகிர்ந்துக்கொண்டால் நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தயவு செய்து பயணங்களில் இருக்கும் சகோதரர்கள் தான் கொண்டுவரும்  பொருட்களிலும், அமானித பொருட்களிலும் கஸகஸா இல்லாமல் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்.


அன்பானவர்களே,சமீபத்தில் ஒரு ஈமெயில் வழியாக வந்த எச்சரிக்கை செய்தியை இங்கு உங்களிடம் பகிர்ந்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன். 

அமீரகத்தில் இருக்கும் ஒரு இந்திய சகோதரரின் நண்பர் லண்டன் செல்வதற்காக துபாய் வழியாக வந்துள்ளார். அவர் தான் கொண்டுவந்த லக்கேஜில் நம்ம ஊர்களில் விருந்து சமையளுக்காக பயன்படுத்தப்படும் கஸகஸா இருந்துள்ளது. கஸகஸா (paapy seeds) போதைப் பொருட்கள் தயாரிக்க உதவும் கொடுமையான பொருள் என்று கண்டுபிடிக்கப்பட்டு, பல அரபு நாடுகளில் சமீப காலமாக தடைசெய்து, இதை கொண்டு வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை நிர்ணயித்துள்ளார்கள். அந்த அப்பாவி மனுசனுக்கு தெரியாது போல இங்கு அனேக அரபு நாடுகளில் கஸகஸா தடை செய்யப்பட்ட பொருள் என்று.


துபாய் போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக சிறையில் உள்ளார். அவரை வெளியில் கொண்டுவர அவரின் நண்பர்கள் எவ்வளவோ முயற்சி செய்து வருகிறார்கள். கைதானவர் மிக கடினமான பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார், அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க இங்குள்ள வக்கீல்களுக்கு ஆகும் செலவு இந்திய ரூபாய் 12 லட்சம் மேல் செலவு ஆகுமாம்.

என்னா கொடுமை பார்த்தீங்களா சிறிய கவனகுறைவால் வந்த வினை.

இந்த செய்தியை வெளிநாடுகளில் இருக்கும் சகோதரர்களுக்கும், இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு பயனம் செய்பவர்களுக்கும், டிரான்சிடாக வருபவர்களுக்கும் தெரிவிப்பது நம் அனைவரின் கடமை.

தடை செய்யப்பட்ட சில பொருள்கள்:

1. கஸகஸா

2. பான்

3. சுபாரி (beetal nuts), பான் பராக்

அமீரகத்தில் தடை செய்யப்பட்ட பொருள்கள் மட்டும் இது தொடர்பான சட்டங்களை தெரிந்துக்கொள்ள இந்த சுட்டிக்கு சென்று பாருங்கள்.
http://www.dubai.ae/en.portal?topic%2CArticle_000827%2C1%2C&_nfpb=true&_pageLabel=home 

இது போன்று ஏற்கனவே இணையத்தளங்களில் படித்ததாக இருந்தாலும், மேலே உள்ள செய்தி எப்போது நடந்தது என்ற தகவல் தெரியவில்லை, இச்செய்தி நமக்கு ஒரு நல்ல எச்சரிக்கை என்பது மட்டும் உண்மை.

உண்மையில் அந்த சகோதரர் அப்பாவியாக இருந்தால் அவரின் விடுதலைக்காக நாம் துஆ செய்வோமாக. இன்ஷா அல்லாஹ்.

தடை செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான மேலும் தகவல்கள் தெரிந்தவர்கள், நம் மக்களுக்கு புரியும்படி இங்கு பகிர்ந்துக்கொண்டால் நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தயவு செய்து பயணங்களில் இருக்கும் சகோதரர்கள் தான் கொண்டுவரும் பொருட்களிலும், அமானித பொருட்களிலும் கஸகஸா இல்லாமல் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்.

இஸ்லாமிய வங்கி என்றால் என்ன?


WEDNESDAY, JULY 24, 2013


இஸ்லாமிய வங்கி என்றால் என்ன?


அது எப்படி நடக்கிறது என்கிற விவரங்களை அறிந்து கொள்வோம் !
இஸ்லாமிய கொள்கையான 'ஷரியத்-தின்படி (Sharia) நடக்கும் வங்கிகளைத்தான் இஸ்லாமிய வங்கிகள் என்கிறார்கள்.
கடனுக்கு வட்டி வாங்குவது 'ஷரியா'-வின் படி தவறாகும் . இஸ்லாமிய முறைப்படி இது குற்றம். அவர் முதலீடு செய்யும் தொழிலில் கிடைக்கும் லாப நஷ்டத்தைப் பகிர்ந்து கொள்வதுதான் இஸ்லாமிய வங்கியின் சிறப்பு.

ஒருவருக்குக் கொடுக்கும் கடனுக்கு வட்டி வாங்காமல்
பல நூற்றாண்டுகளாகவே இந்த முறை முஸ்லீம் நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது. எனினும் 20-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் இஸ்லாமிய வங்கிகள் நடைமுறைக்கு வந்தன.
வழக்கமாக வர்த்தக வங்கிகளில் கொடுக்கப்படும் கடனுக்கு வட்டி வசூலிக்கப்படும். இஸ்லாமிய வங்கியைப் பொறுத்தவரைகடன் கொடுப்பவரும் வாங்குபவரும்பங்குதாரர்களாக ஆகிவிடுகிறார்கள்.
அவர்கள் அந்தத் தொழிலை சிறப்பாக நடத்தி லாபம் சம்பாதிக்க வேண்டும். நஷ்டம் ஏற்பட்டால் அதைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதை முன்னரே ஒப்புக் கொண்டு அதன்படி நடக்க வேண்டும் என்பது இஸ்லாமிய வங்கியின் சிறப்பு. மனைவீடு போன்ற ஏதாவது சொத்தை ஜாமீனாகக் கொடுத்தால் மட்டுமே இஸ்லாமிய வங்கிகளில் தொழிற்கடன் கிடைக்கும் என்பது முக்கியமான விஷயம்.
சரிவாகனக் கடனை இஸ்லாமிய வங்கிகள் எப்படிக் கொடுக்கின்றனவாகனத் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து இஸ்லாமிய வங்கி முதலில் காரை வாங்கிவிடும்.
அதனை வங்கி வாடிக்கையாளருக்கு லாபம் வைத்து அதிக விலைக்கு விற்கும். வாகனத்தை வாங்கியவர்அதற்கான தொகையை மாதத் தவணையில் கட்டி வர வேண்டும். முழுவதும் பணம் கட்டி முடிக்கும் வரை வாகனத்தின் உரிமைஇஸ்லாமிய வங்கியிடம் இருக்கும்.
இஸ்லாமிய வங்கிகள் வீட்டுக் கடனை வழங்கும் விதமும் வித்தியாசமானது. வாடிக்கையாளர் வாங்க விரும்பும் வீடானதுவங்கி மற்றும் வாடிக்கையாளரின் பெயரில் கூட்டுச் சொத்தாக பதிவு செய்யப்படும். இதில்யார் எவ்வளவு பணத்தை முதலீடு செய்கிறார்கள் என்றும் குறிப்பிடப்படும்.
பிறகு இந்தச் சொத்து வாடிக்கையாளருக்கு வாடகைக்கு விடப்படும். இந்த வாடகைத் தொகைசொத்தில் வங்கி மற்றும் வாடிக்கையாளருக்கு உள்ள பங்கிற்கு ஏற்பபிரிக்கப்பட்டுவங்கிக்கு உரிய பங்கை (அதிகரிக்கப்பட்ட விலையில்) மாதம்தோறும்குறிப்பிட்ட தொகையைக் கட்டி வாடிக்கையாளர் அந்த வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
 இது கிட்டத்தட்ட வீட்டுக் கடனுக்காக நாம் கட்டும் இ.எம்.ஐ. போல் இருக்கும்.வாடிக்கையாளரால் பணத்தைச் சரியாகக் கட்ட முடியவில்லை என்றால் அந்த வீட்டை விற்றுவங்கி மற்றும் வாடிக்கையாளருக்கு உள்ள பங்கிற்கு ஏற்ப பிரித்துக்கொள்ளப்படும்.
ஈரான்மலேசியாவில் இஸ்லாமிய வங்கிகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. ஜப்பான்ஐரோப்பாகனடா போன்ற நாடுகளில் இஸ்லாமிய வங்கிகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவது முக்கியமான விஷயம்.
வர்த்தக வங்கி மற்றும் இஸ்லாமிய வங்கி நடைமுறைகளைப் பற்றி நன்குஅறிந்திருக்கும் தோஹா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சீதாராமன்,இஸ்லாமிய வங்கிகள் சிறப்பான வளர்ச்சி கண்டு வருவதாகச் சொன்னார்.
''உலகம் முழுக்க கடந்த ஐந்தாண்டுகளில் வர்த்தக வங்கிகளின் வளர்ச்சி 2%-மாக உள்ளது. இதே காலத்தில் இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சி 12-15%-மாக இருக்கிறது. இப்போது உலக அளவில் இஸ்லாமிய வங்கிகள் நிர்வகித்து வரும் சொத்துகளின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிகம்.
சர்வதேச நிதியம் (IMF- International Monetary Fund) மற்றும் உலக வங்கிகளின் நிதி நிர்வாக அமைப்பான பேசல் (Basel) இஸ்லாமிய வங்கி நடைமுறைகளை அங்கீகரித்துள்ளன''என்றார்.
தற்போது இந்தியாவில் ஷரியா கொள்கை அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள்.
இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் இஸ்லாமிய வங்கி ஒன்றை ஆரம்பிக்க ஐ.டி.பி.ஐ. வங்கி முயற்சி எடுத்து வருகிறது. இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகளைக் கொண்டு வர வேண்டும் என்றால் அவற்றுக்கென பிரத்தியேக சட்டம் தேவை என ஆர்.பி.ஐ. கவர்னர் சுப்பாராவ் அண்மையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு இஸ்லாமிய வங்கிகள் வந்தால் நம் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள்.
நன்றி சகோ. சி.சரவணன்
இஸ்லாமிய வங்கிகள் குறித்து மேலும் சில தகவல்கள்

இஸ்லாமிய நாடுகள் இணைந்து 1975-ம் ஆண்டில் இஸ்லாமிய மேம்பாட்டு வங்கியை உருவாக்கின. அதே ஆண்டில் வர்த்தக ரீதியிலான இஸ்லாமிய வங்கிதுபாய் இஸ்லாமிய வங்கி என்ற பெயரில் உருவானது.

ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 1994-ம் ஆண்டு முதல் பஹ்ரைனில் ஆண்டு தோறும் உலக இஸ்லாமிய வங்கிகளின் மாநாடு நடந்து வருகிறது. இதில்இஸ்லாமிய வங்கிகளின் தலைவர்கள் பங்கேற்று அதன் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டி வருகிறார்கள்.

உலக அளவிலான இஸ்லாமிய வங்கிகளில் 60% ஈரானில் மட்டுமே இருக்கின்றன.


மதுபானம்சூதாட்டம் தொடர்பான முதலீட்டு விஷயங்களைஇஸ்லாமிய வங்கிகள் தவிர்த்துவிடுகின்றன

நன்றி: நாணயம் விகடன் - மற்றும் சத்தியமார்க்கம்

9 அக்., 2013

இளைஞர்களே...

ஒரு சமுதாயத்தின் இணையற்ற பாரிய சக்தி அச்சமூதாயத்தின் இளைஞர்களே ஆவார்கள். ஒரு மனிதன் தனது வாழ்நாளில் மூன்று பருவங்களை கொண்டுள்ளான் என்பது நாம் அனைவரும் அறிந்தவிடயமாகும். வழுவற்ற குழந்தை பருவம், வயதுடைய முதுமை பருவம் ஒரு மனிதனுடைய வாழ் நாளின் மிகவும் பலவீனமான காலகட்டங்களாகும். இளமை பருவம் ஒரு சமூக மாற்றத்தில், புரட்சிகளில், போராட்டங்களில், அது போன்று சமூகத்துக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய மிகவும் மோசமான விடயங்கள் என அனைத்து அம்சங்களிலும் மிக முக்கியமானதொரு பங்களிப்பை செலுத்திக் கொண்டிருப்பதை நம் யாராலும் மறுக்க முடியாத‌  உண்மையாகும். ஒரு சமூக மாற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு என்பது மிகவும் இன்றியமையாத அம்சமாகும்.
இஸ்லாமிய வரலாறுகளில் இஸ்லாத்தின் வளர்ச்சிகளுக்கு ஈடு இணையற்ற பங்களிப்பை செய்தவர்களும் இளைஞர்களே ஆவார்கள். இன்றைய எமது முஸ்லிம் இளைஞர் யுவதிகளின் நிலைமைகளை உற்று அவதானிக்கும் பொழுது மிகவும் கவலைக்குறிய ஒரு பாதாள நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை காணலாம். நவீன ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சிகளுக்குள் மடிந்து முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சிகளுக்கு துணைபோகக்கூடியதும், உன்னத மார்கத்துக்கு கலங்கம் விளைவிக்க கூடிய ஒரு சமுதாயமாகவே எமது முஸ்லிம் இளைஞர் சமுதாயம் மாறிக் கொண்டிருப்பதை காணலாம்.
யூசுப் கர்ளாவி அவர்கள் கூறும் ஒரு கருத்து இங்கு மிகவும் குறிப்பிட்டு கூறத்தக்கது. ” நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை விட மூளைகளும், உணர்ச்சிகளும் ஆக்கிரமிக்கப்படுவது மிகவும் பயங்கரமானது”
கர்ளாவி அவர்கள் குறிப்பிடுவது போன்று எமது சமூகம் இது போன்றதொரு அபாய நிலையிலேயே சிக்கித் தவிக்கின்றது. ஆபாச இணையத்தளங்கள் ஊடாக உணர்சிகள் தூண்டப்பட்டு ஒரு சமூக கட்டமைப்பை சீரழிக்கக் கூடிய நிலைக்கு இட்டு செல்கின்றது. சமுக வளைத்தளங்கள் ஊடாக கால, நேரம் வீணாக்கப்படுவது மாத்திரமன்றி காதல், வழிகேடு என தவரிய பாதையின்பால் இட்டு செல்கின்றது. இது மாத்திரமன்றி நவீன கால ஜாஹிலிய கலாச்சாரங்களால் மூழ்கடிக்கப்பட்டு மூளைகள் மந்தமாக்கப்பட்டுக் கொண்டிருகின்றது. இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவு கூட அற்ற, இஸ்லாமிய கடமைகளில் பராமுகமும், இஸ்லாம் அறிவு பற்றிய ஒரு இழிவான எண்ணமும், இஸ்லாமிய கலாச்சாரங்கள் பற்றிய ஒரு கேவலமான பார்வையும் கொண்ட ஒரு இளைஞர் கூட்டமே முஸ்லிம்கள் ஆகிய எம்மத்தியில் உருவாகிக் கொண்டிருப்பதை காணலாம்.
பெண்கள் சமூகத்தின் கண்கள் என்பார்கள், இன்றைய யுவதிகள் நாளைய தாய்மார்கள் என்பார்கள் நமது வருங்கால‌ தாய்மார்களின் நிலை என்ன? ஒரு குழந்தையின் வளர்ப்பில் பாரியதொரு தாக்கத்தை செலுத்தும் இவர்களது இஸ்லாம் பற்றிய தெளிவு என்ன? சினிமா, சின்னத்திரை, இணைய‌த்தளம், நாவல்கள், சஞசிகைகள் போன்றவற்றின் ஆபாச கருத்துக்களால், தவரிய‌ முன்மாதிரிகளால், வழித்தவறி தடுமாறிக் கொண்டிருகின்றது. இன்னும் சமூக வளைத்தளங்களின் மாயைகளில் சிக்குண்டு காதல், தவரிய நட்பு என அலைக்கழிந்து கொண்டிருப்பதை காணாலாம்.
இஸ்லாம் கூறும் இளைஞன்.
(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” (2 : 30)
அல்லாஹ் மனிதனை தனது பிரதிநிதியாக இவ்வுலகில்  படைத்து கண்ணியபடுத்தியுள்ளான். அதுமாத்திரமன்றி அனைத்து விடயங்களையும் சீரான வழிகாட்டலுடன் மிகவும் இலகுவாக்கி, இறைவனின் படைப்புகளில் ஒரு சக்திமிக்க படைப்பாக படைத்து ஆட்சி செய்யும் அதிகாரத்தையும் சக்தியையும் மனிதனுக்கே வழங்கியுள்ளான்.  மனிதன் ஒரு பிரதி நிதி என்ற அடிப்படையில் தனது கடமையை, இறைவன் தனக்கு இட்ட கட்டளையை இறைவனுக்காக செய்யத்தவறியுள்ளான். ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு நாட்டின் பிரதி நிதியாக நாம் செல்கின்ற பொழுது எமது மேல் அதிகரிகளால் இடப்பட்ட கட்டளைகளை ஆர்வத்துடன், நற்பெயருக்ககாக நிறைவேற்றுவது போன்று அல்லாஹ்வினால் அவனது பிரதிநிதியாக படைக்கப்பட்டு அழகிய முறையில் வழிகாட்டப்பட்ட நாம் எவ்வளவு தூரம் அவனது ஏவல்களை நிறைவேற்றுகின்றோம் என்பது கேள்விக்குறியே?
இளமை பருவத்தின் முக்கியதுவத்தை உணர்த்துவதற்கு பின்வரும் ஹதீஸ்கள் போதுமானவையாகும்.
.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் ஏழு நபர்களுக்கு நிழல் கொடுப்பான்.
1. நீதமாக நடந்து கொண்ட ஆட்சியாளன்
2. அல்லாஹ்வின் வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்
3. தனது உள்ளத்தைப் பள்ளியுடன்; தொடர்பு படுத்திக் கொண்டிருந்த மனிதன்
4. அல்லாஹ்வுக்காக நேசம் கொண்டு அதற்காகவே இணைந்து அதற்காகவே பிரிந்த இரு மனிதர்கள்
5. அந்தஸ்தும் அழகுமுள்ள பெண் தவறு செய்ய அழைத்தபோது நிச்சயமாக நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன் எனக் கூறிய மனிதன்
6. வலது கை கொடுப்பதை இடது கை அறியாவண்ணம் தர்மம் செய்யும் மனிதன்
7. தனித்திருந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து கண்ணீர் வடித்த மனிதன்.
இது ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும் தான். அவர்களும் தம் செயல்கள் குறித்து விசாரிக்கப்படுவார்கள். அவர்களின் செயல்கள் நல்லவையாகயிருந்தால் நன்மையும் தீயவையாக இருந்தால் தீமையும் உண்டு. கேள்வி கணக்கும் கூலியும் தண்டனையும் ஆண்களுக்கு இருப்பது போலவே பெண்களுக்கும் உண்டு.
வாலிபத்தை எவ்வாறு கழித்தாய்? என்ற வினாவுக்கு விடை கொடுக்காமல் ஓர் அடியானின் பாதம் மறுமையில் நகர முடியாது என்பதை பின்வரும் ஹதீஸ் எச்சரிக்கின்றது- ‘மறுமை நாளில் ஓர் அடியான் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்கும் வரை அவனது கால்கள் இரண்டும் நகர முடியாது’. அவை யாவன…
01. தனது வாழ்க்கையை எவ்வாறு கழித்தாய்
02. தனது வாலிபப் பருவத்தை எந்த விடயங்களில் ஈடுபடுத்தினாய்.
03. செல்வத்தை எவ்வாறு சம்பாதித்து எவ்வாறு செலவு செய்தாய்.
04. பெற்ற அறிவின் மூலம் என்ன செய்தாய். (ஆதாரம் – தபராணி)
மேற்கூறிய ஹதீஸ்களின் மூலம் இளமை பருவம் வாழ்கையில் எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்து கொள்ளலாம்
ஒரு மனிதனின் வாழ்க்கைக் கட்டத்தில் வாலிபப் பருவம் சிக்கல்களும் போராட்டங்களும் நிறைந்தது. அதில் அவதானமாகவும் நிதானமாகவும் செயற்படுவது எமது கடமையாகும். விட்டில் பூச்சிகள் விளக்கின் ஒளியை பூவாக நினைத்து ஏமாந்து அதில் தமது உயிரை மாய்த்துக் கொள்வது போல சில இளைஞர்கள் தமது வாலிபத்தை அழித்துக் கொள்கின்றனர். தமது விரல்களாலே தமது கண்களை குத்திக் கொள்கின்றனர்.
இஸ்லாத்தின் வரலாறுகளில் இளைஞர்களின் பங்களிப்பு.
இஸ்லாத்துக்கு அன்றைய முஸ்லிம் இளைஞர்கள் ஆற்றிய பணியும் மகத்தான சேவகளின் துளிகளுமே இன்று பரந்த விரிந்து கிளைவிட்டு காணப்படும் முஸ்லிம் சமூகம். அன்றைய இளைஞர்களிடம் காணப்பட்ட, தியாகம், வீரம், நல்லொழுக்கும் இன்மையே இந்த பலமான‌ முஸ்லிம் சமூகம் இன்று பலவீனமடைவதற்கான மிகமுக்கிய காரணியாகும்.
சிந்து சமவெளியை முஹம்மத் பின் காஸிம் கைப்பற்றிய போது அவர்களிம் வயது 17. பைஸாந்திய சாம்ராஜ்ஜியத்தை முஹம்மத் பின் பாதிஹ் கைப்பற்றிய பொழுது அவர்களின் வயது 23. ஸ்பெயினை தாரிக் பின் முறாத் கைப்பற்றிய  பொழுது அவர்களின் வயது 21. இது போன்ற வீரதீர செயல்களை செய்து இஸ்லாத்தின் வளர்சிக்கு தூண்களாக இருந்த இளைஞர்கள் இன்று எமது சமூகத்தில் எங்கே?
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு இஸ்லாத்தை போதிப்பதற்காக அனுப்பப்பட்ட  ஸஹாபி முஸ் அப் பின் உமைர் (ரழி) ஒரு இளைஞர். அபிசீனியாவுக்கு முதன் முதலில் ஹிஜ்ரத் செய்த ஆண்களும், பெண்களும் இளைஞர்களும், யுவதிகளுமே ஆவார்கள். யெமனுக்கு நீதிபதியாகவும், விரிவுறையாளராகவும் அனுப்பட்ட முஆத் பின் ஜபல் (ரழி) ஒரு இளைஞர். மூத்த ஸஹாபாக்கள் பங்கு பற்றிய ஒரு படையணிக்கு தளபதியாக நியமிக்கப்பட்ட உஸாமா பின் ஸைத் (ரழி) ஒரு இளைஞர். அபூபக்கர் (ரழி) அவர்களது காலத்தில் அல் – குர் ஆனை ஒன்றுதிரட்டும் பணியில் பங்கு கொண்டர்வ‌களுள் பலர் இளைஞர்களே ஆவார்கள்.
இப்ராஹிம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தை தனது தந்தைக்கு எத்திவைத்த பொழுது அவர்களின் வயது 14. சிலை வணங்கிகளின் சிலைகளை உடைத்த இவரை குர் ஆன் ஒரு இளைஞர் என குறிபிடுகின்றது.  அது மாத்திரமன்றி இறை நிரகரிப்பளார்கள் மற்றும் நம்ரூத் போன்ற பல கொடுங்கோள் மன்னர்களுடன் போராடியதும் அவர்களது இளமை பருவத்திலே ஆகும்.  யூஸுப் (அலை) அவர்கள் முகங்கொடுத்த இன்னொரன்ன துன்பங்களை, இன்னல்களை தமது இளமை பருவத்திளே சந்தித்து அழகிய முறையில் வெற்றி கொண்டதையும் ஸூரா யூஸுப்பில் அழகிய படிப்பினைகளாக குறிப்பிடப்பட்டிருப்பதை காணலாம். ஸுலைமான் (அலை) துல்கர்னைன் (அலை) மூஸா (அலை) அவர்கள் தமது இளமை பருவத்தையே எல்லாம் வள்ள அல்லாஹ்வுக்கே அர்பணித்திருப்பதை காணாலாம், ஸூரா கஃப் குறிப்பிடப்படும் இளைஞர்களின் வரலாறு என பல்லாயிரம் படிப்பினைகளை கொண்டுள்ள எமது இன்றைய முன்மாதிரி இளைஞர்கள் எங்கே?
மது, மாது, அனாச்சாரம், அட்டூழியம், என ஜாஹிலியத்தின் உச்ச நிலையில் அந்த குறைஷிக் குல‌த்தில் உத்தமராக வாழ்ந்த நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் இளைஞர்களே. இஸ்லாம் மார்கத்தை வளரப்பதற்கு தமது உயிர்களை தியாகம் செய்த, பல இன்னோரன்ன துன்பங்களை, இன்னல்களை அனுபவித்த, நபி (ஸல்) அவர்கள் காட்டிய ஒழுக்க முன்மாதிரிகளை அணுவ‌ளவும் பிசகாது வாழ்ந்த ஸஹாப்பக்களும் இளைஞர்களே ஆவார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் அவர்களை ஆரம்பத்தில்  ஆதரித்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் நிராகரித்தவர்களில் அதிகமானோர் முதியவர்கள் என்றும்.
இது போன்று ஆயிரம், ஆயிரம் முன்மாதிரிகளை கொண்டுள்ள இன்றைய எமது சமூகத்தின் முன்மாதிரிகள் யார்? நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் என இவர்களின் பின்னால் குடைபிடித்துத் திரியும் இளைஞர்கள் இது போன்று இஸ்லாம் கூறும், இஸ்லாமிய வரலாறுகளில் கண்ட உதராண புருஷர்களாக மாறுவது எப்போது?
நாம் அனைவரும் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும் இவ்வுலக வாழ்க்கை அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் அற்பமானது. மனிதனாகிய எமக்கு இது நிரந்தரமற்ற தங்குமிடம், மரணத்தை சுவைக்கும் தருணம் எக்கணமும் எம்மை எத்தலாம். அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் அற்பமான இந்த சொற்பமான காலமே எமது முடிவற்ற கபுருடைய வாழ்கை, பல்லாயிரம் ஆண்டுகள் தங்கும் மஹ்ஸருடைய வாழ்க்கை மற்றும் எமது நிரந்தர தங்குமிடமான சுவர்கம் நரகத்தை தீர்மானிக்கப் போகின்றது.
பின்வரும் குர் ஆன் வசனங்கள் இவ்வுலக வாழ்கைக்கு சிறந்த உதாரணங்களாகும்.
“மேலும் மறுமையை நம்பாத அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது – அவர்கள் இது பற்றிக் கற்பனையாக எண்ணுவதைத் தவிர வேறில்லை. (45:24)
அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் அது உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; இது மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; அதாவது: அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு மறுமையில் கடுமையான‌ வேதனையுண்டு; முஃமின்களுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. (57:20)
இஸ்லாம் என்பது தொழுகை, நோன்பு, ஸகாத் மற்றும் ஹஜ் போன்ற கடமைகள் மாத்திரமன்று. எமது எண்ணங்கள் மிகவும் அழகிய, இலகுவான வாழிகாட்டகளை சுமையாகியுள்ளன. எமக்கான அடிப்படை தேவைகள் அனைத்தும் இறைவனால் தீர்மாணிக்கப்பட்டுவிட்டன. அந்த அடிப்படை விடயங்களை எம்மால் தீர்மானிக்கவோ, அனுமானிக்கவோ முடியாது. மிகவும் சொற்மான சில குறிபிட்ட விடயங்களிளே எமக்கான தெரிவு சுதந்திரத்தை தந்து அதற்காக நன்மை தீமையை பிரித்தறிய கூடிய பகுத்தறிவை தந்துள்ளான்.
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான், (2 : 2008)
இஸ்லாம் மார்க்கம் பற்றிய தெளிவை பெறுவதற்கு முயற்சிப்பதுடன் அல்லாஹ்வினால் அமானிதமாக அருளப்பட்ட இவ்வுலக வாழ்கையை, இளமை பருவத்தை அல்லாஹ்வின் வழிகாட்டலின் நிழலில் செலவிட்டு இவ்வுலகிலும் மறு உலகிலும் வெற்றிபெறுவதற்க்கு முயற்சிப்போம்.
Related Posts Plugin for WordPress, Blogger...